என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
திமுக அரசு உழவர்களை உயிராக நினைக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
- நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
* 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
* டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
* உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கிறது பாஜக அரசு.
* உழவர்களின் மேன்மைக்கு திட்டங்களை தீட்டுகிறது திமுக அரசு.
* உழவர் பெருமக்களை திமுக அரசு உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதிநிலை அறிக்கை உணர்த்துகிறது.
* உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருக்கிறோம்.
* பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
* கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு. இந்த ஆண்டு மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம்.
* உழவர்கள் மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில்துறையை போல் அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களில் இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம்.
* மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.