search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொரோனாவை விட கொடியது பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    கொரோனாவை விட கொடியது பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது.
    • நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    சென்னை அமைந்தகரையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மொழிப்போர் தியாகிகள் நாளான இன்று, திருச்சியில் கருணாநிதிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சிலை திறந்துள்ளார்.

    மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் முன்நின்றனர்.

    தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.

    இந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கருணாநிதி. உலகில் வேறெங்கும் மொழிக்காக இப்படி ஒரு போராட்டம் நடைபெற்றது இல்லை.

    மொழிப் போராட்டத்திற்கு பிறகு தான் திமுக ஆட்சிக்கு வந்தது. மொழியின் பழம்பெருமையை பேசுவது மட்டுமே மொழிப்பற்று அல்ல.

    மொழியை கல்வியறிவின் வாயிலாக வளர்த்தோம், அதனால் தான் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது.

    தமிழை புறக்கணித்து இந்தியை பாஜக திணிக்கிறது. இந்தி பேசும் மக்களை ஏமாற்றவே, பாஜக இந்தி மொழியை கையில் எடுத்துள்ளது.

    கொரோனாவை விட கொடியவர்கள் பாஜக அரசு. பாஜகவின் தோல்வி பட்டியில் மிக நீளமானது.

    பாஜக ஆட்சியில் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. பாஜகவுக்கு நேற்று வரை ஆமாம் சாமி போட்டவர் எடப்பாடி பழனிசாமி.

    நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழையவிட்டவர் எடப்பாடி பழனிசாமி. இந்தியா கூட்டணி ஆட்சி, உண்மையான கூட்டாட்சியாக அமையும்.

    ராமர் கோவிலை காண்பித்து வடமாநில மக்களை திசை திருப்பி வருகிறது பாஜக. ஆனால், இந்த முறை வடமாநிலங்களிலும் பாஜக தோல்வியை சந்திக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×