என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நவீன இந்தியாவை உருவாக்கியவர் அப்துல் கலாம்- தமிழக ஆளுநர் புகழாரம்
- நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம்.
- அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.
சென்னை எம்.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் சிலையை திறந்து வைத்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அதன் அடியில் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், மாணவர்களை வடிவமைப்பதில் எம்.ஐ.டி. சிறப்பான சேவையை வழங்கி வருகிறது என்றும், வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் கலாமை எம்.ஐ.டி.நிறுவனம் உருவாக்கியது பாராட்டுக்குரியது என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் கூறியுள்ளதாவது: நாட்டிற்காக தன் வாழ்வை வாழ்ந்த ஏவுகணை நாயகன் அப்துல்கலாம். சாதிக்க வானமே எல்லை என்ற அவரது எண்ணங்களே இளைஞர்களுக்கு உந்து சக்தியாக உள்ளது. அப்துல்கலாம் வகித்த உயர் பதவி இளைஞர்களுக்கு உண்மையான உத்வேகம் அளிக்கிறது.
சிறந்த தலைவரான அவர், எளிமையானவராகவும், பணிவானவராகவும் இருந்தார். நமது நாட்டை நன்கு புரிந்து கொண்டு அதன் பாரம்பரியத்தையும் பெருமையையும் நிலை நிறுத்தினார், நவீன இந்தியாவை அவர் உருவாக்கினார். இவ்வாறு ஆளுநர் தெரிவித்தார்.