என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு தொடங்கியது: 7301 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி
- சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் குரூப்4 தேர்வு நடைபெறுகிறது.
- தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் பறக்கும் படையினர் கண்காணிப்பு
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 689 தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.
அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 பணியிடங்களுக்கு, 9 லட்சத்து 35 ஆயிரத்து 354 ஆண்கள், 12 லட்சத்து 67 ஆயிரத்து 457 பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 503 தேர்வு மையங்களில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7 ஆயிரத்து 689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.