என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு
- திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
- இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உள்ள 54 சுங்கச்சாவடிகளுடன் புதிதாக சில சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இவற்றில், குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதியும் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
நடப்பாண்டுக்கான கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி (இன்று நள்ளிரவு) முதல் அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, திண்டுக்கல், திருச்சி, சேலம், மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
குறிப்பாக, மதுரை-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் சுங்க கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் ஒருமுறை சென்றுவர பழைய கட்டணம் ரூ.85-ல் இருந்து ரூ.90 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2 ஆயிரத்து 505-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 740 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இலகுரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.145-ல் இருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.220-ல் இருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4 ஆயிரத்து 385-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர கட்டணம் ரூ.290-ல் இருந்து ரூ.320 ஆகவும், இருமுறை சென்றுவர ரூ.440-ல் இருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.8 ஆயிரத்து 770-ல் இருந்து ரூ.9 ஆயிரத்து 595 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்றுவர ரூ.470-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருமுறை சென்றுவர கட்டணம் ரூ.705-ல் இருந்து ரூ.770 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணமாக ரூ.14 ஆயிரத்து 95-ல் இருந்து ரூ.15 ஆயிரத்து 420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பிற சுங்கச்சாவடிகளுக்கும் கட்டணம் தூரத்துக்கு தகுந்தவாறு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்