search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3-வது நாளாக இன்று ஊட்டியில் மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    3-வது நாளாக இன்று ஊட்டியில் மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்

    • பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    ஊட்டி:

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. மலர் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருகிறார்கள்.

    3-வது நாளான இன்று காலையிலேயே ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்தனர். அவர்கள் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்து அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    மேலும் அங்கு பல வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள மலைரெயில், டிஸ்னி வேல்ட் உள்ளிட்ட பல்வேறு அலங்கார சிற்பங்களையும் பார்த்து ரசித்தனர். மலா் கண்காட்சியில் நடப்பு ஆண்டில் முதன்முறையாக இரவில் லேசா் லைட் ஷோ நடத்தப்பட்டது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனா்.


    ஊட்டி தாவரவியல் பூங்கா மட்டுமின்றி மற்ற சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    படகு இல்லம், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.

    கோத்தகிரி அருகே கொடநாடு காட்சி முனை அமைந்துள்ளது.

    தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு, கீழே இறங்கும் வழியில் உள்ள கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வருகின்றனர். அந்த வகையில் கொடநாடு காட்சிமுனையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் கொடநாடு காட்சிமுனையில் நிலவிய இதமான காலநிலையோடு, இங்கு அமைந்துள்ள தமிழக-கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிக ளில் உள்ள மலை முகடுகளின் நடுவே உருவாகும் அடர்ந்த வெண் மேகங்களையும், ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளை கண்டு ரசித்தனர்.

    இ-பாஸ் நடைமுறையால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகன நிறுத்துமிடம், தங்குமிடம் போன்ற பிரச்சினைகள் இன்றி மகிழ்ச்சியாக வந்து செல்ல முடிந்ததாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனா்.

    Next Story
    ×