என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் பீடி இலைகள் பறிமுதல்
- போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
- பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகத்தை அடுத்து இனிகோநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.
லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மூடைகளில் 2 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.