search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகை- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
    X

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகை- பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்

    • கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.
    • உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு.

    கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளது.

    100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 16 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி ஏற்கனவே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் கள்ளக்குறச்சிக்கு வருகை தந்துள்ளார்.

    அங்கு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து விஜய் ஆறுதல் கூறி வருகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் விஜய் கேட்டறிந்தார்.

    இரவு 8 மணிக்குள் நேரடியாக அரசு மருத்துவமனைக்கு சென்றடைவார் என தகவல் வெளியான நிலையில், விஜய் தற்போது மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்.

    சம்பவம் குறித்து காலை அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் விஜய் நேரில் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் மற்றும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மருத்துவமனையை தொடர்ந்து, கருணாபுரம் கிராமத்திற்கும் விஜய் செல்லயிருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×