search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஓட்டப்பிடாரம் அருகே வேளாங்கண்ணி மாதா சிலை உடைப்பு- கிராம மக்கள் போராட்டம்
    X

    மாதா சிலையின்றி காணப்படும் கெபியையும், அதன் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையும் காணலாம்.

    ஓட்டப்பிடாரம் அருகே வேளாங்கண்ணி மாதா சிலை உடைப்பு- கிராம மக்கள் போராட்டம்

    • கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்மாடி தளவாய்புரம் கிராமம். இங்குள்ள சாலையோரம் அன்னை வேளாங்கண்ணி மாதா உருவச்சிலை வைக்கப்பட்ட கெபி உள்ளது. இதனை அப்பகுதி கிறிஸ்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. லோகேஷ்வரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் மாதா சிலையை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியினர் கெபியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×