என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும்- விக்கிரமராஜா
- தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடியதற்கு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
- தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூடியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், மார்க்கெட், பஜார், பள்ளிக்கூடங்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story






