search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவை நலம் விசாரித்த ராகுல்காந்தி
    X

    வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவை நலம் விசாரித்த ராகுல்காந்தி

    • வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
    • 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது

    யூ டியூபில் பலரும் சமையல் சேனல்கள் வைத்திருந்தாலும் வில்லேஜ் குக்கிங் என்ற யூடியூப் சேனல் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. 22 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள இந்த யூடியூப் சேனலை கடந்த 2018-ஆம் ஆண்டு சுப்பிரமணியன், முருகேசன், அய்யனார், தமிழ்செல்வன், முத்து மாணிக்கம், பெரியதம்பி ஆகியோர் தொடங்கினர்.

    இந்த குழுவை முன்னாள் சமையல் கலைஞரான பெரியதம்பி வழி நடத்துகிறார். இந்த சேனல் வெறும் உணவு சமைப்பதால் மட்டும் பிரபலமாகவில்லை. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் கிராமத்து பின்னணியில் உணவு தயாரிக்கப்படுவதால் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    அதுமட்டுமல்லாமல் தமிழகத்திற்கு வந்த ராகுல் காந்தி இவர்களின் சமையலை சுவைத்து பாராட்டினார். மேலும், இந்த குக்கிங் சேனல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி என திரைப்பிரபலங்கள் பலர் நடித்து வெளியான 'விக்ரம்' திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தனர். இதன் மூலம் இவர்கள் மேலும் பிரபலமானார்கள்.

    கடந்த மார்ச் மாதம் குக்கிங் சேனல் மூலம் புகழ்பெற்ற தாத்தா பெரிய தம்பி இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்று அந்த குழுவை சேர்ந்த சுப்ரமணியன் வேலுசாமி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாத்தா பெரியசாமியை ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இது சம்பந்தமாக பெரிய தம்பி வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் மருத்துவமனையில் இருக்கும்போது என்னை நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தம்பி ராகுல் காந்தி தொலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தார். "தாத்தா நல்லாருக்கீங்களா? உங்களுக்கு ஒன்னும் ஆகாது. பூரண குணமடைந்து வருவீர்கள்" என்றார். அவருக்கும் நன்றி" என்று அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×