என் மலர்
தமிழ்நாடு

X
சென்னையில் விநாயகர் சிலைகள் விறுவிறுப்பான விற்பனை
By
Maalaimalar17 Sept 2023 2:47 PM IST

- வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம்.
- புரசைவாக்கம் தானா தெரு, கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை அலங்கரித்து வைத்து பூஜை, வழிபாடு செய்வது வழக்கம்.
சென்னையில் கொசப்பேட்டை, திருவல்லிக்கேணி, வடபழனி, ராமாபுரம் உள்ளிட்ட இடங்களில் களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடந்தது.
இந்த நிலையில் புரசைவாக்கம் தானா தெரு, கொசப்பேட்டையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு ஏராளமாக குவிக்கப்பட்டு உள்ளன. சிறிய களிமண் விநாயகர் சிலைகள் ரூ. 150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரை அடி முதல் 2 அடி வரையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்
Next Story
×
X