search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் காந்தி எங்கே? கள்ளச்சாராய விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி
    X

    ராகுல் காந்தி எங்கே? கள்ளச்சாராய விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி

    • இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
    • தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்?

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சமபத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக , நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    நாளை அதிமுக சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். தமிழக பாஜக சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காங்கிரசை கடுமையாக விமர்சித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன், காங்கிரஸ் இந்த சம்பவத்துக்கு எதிராக குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதது அதிர்ச்சியளிக்கிறது.

    லைசன்சுடன் மாநில அரசால் டாஸ்மாக் நடத்தப்பட்டு வரும் நிலையில் காலக்குறிச்சி ஊருக்கு நடுவில் கெமிக்கல் விஷ சாராயம் விற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எங்கே? ராகுல் காந்தி எங்கே? உயிரிழந்தவர்களில் 40 பேர் தலித்துகள் ஆவர், தலித்துகள் விஷ சாராயத்தால் பலியான போதிலும் ராகுல் இதுகுறித்து பேசாதது ஏன்? இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×