search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இவ்வளவு இழுபறி ஏன்?
    X

    மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் இவ்வளவு இழுபறி ஏன்?

    • எங்கள் கட்சியில் தேர்தல் வந்தால் போட்டியிட வாய்ப்பு கேட்டு படையெடுக்கும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள்.
    • திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை.

    சென்னை:

    தலைவர்களின் அழுத்தத்தால் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளரை முடிவு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    வேட்பு மனுதாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும். ஆனால் இதுவரை வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. பெயர் அறிவித்த பிறகுதான் மனுதாக்கலுக்கான ஏற்பாடுகளை வேட்பாளர் செய்ய வேண்டும். அதற்கான கால அவகாசம் மிகவும் குறைவாக இருக்கிறது.

    இன்று கட்டாயம் வேட்பாளரை அறிவிக்க வேண்டும். இந்த இழுபறிக்கான காரணம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    எங்கள் கட்சியில் தேர்தல் வந்தால் போட்டியிட வாய்ப்பு கேட்டு படையெடுக்கும் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் மாநில செல்வாக்கு மற்றும் டெல்லி செல்வாக்கை வைத்து எப்படியாவது முட்டி மோதி சீட் வாங்கி விடுவார்கள்.

    இந்த தேர்தலில் திருச்சி தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் அந்த தொகுதி எம்.பி.யான திருநாவுக்கரசருக்கு இடமில்லை. நெல்லை தொகுதியை எதிர்பார்த்தார். அதுவும் கிடைக்கவில்லை.

    இப்போது இருப்பது மயிலாடுதுறை ஒரே தொகுதிதான். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார் மற்றும் மண்ணின் மைந்தரான மணிசங்கர அய்யர், பிரவீண் சக்கரவர்த்தி, சி.டி.மெய்யப்பன், தங்கபாலு அனைவரும் இந்த தொகுதிக்காக மல்லுக்கட்டுகிறார்கள். எல்லோரும் தவிர்க்க முடியாதவர்கள். டெல்லியிலும் செல்வாக்கு பெற்றவர்கள். தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? யாரை தவிர்ப்பது என்று குழப்பத்தில் இருக்கிறார்கள். பேசாமல் குலுக்கல் முறையில் அறிவிக்கலாம் என்றார் நகைச்சுவையாக.

    Next Story
    ×