என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராஜ்குமார்
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
- ராஜ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
- சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






