என் மலர்
தமிழ்நாடு
X
இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை
Byமாலை மலர்29 May 2024 10:36 AM IST (Updated: 29 May 2024 11:56 AM IST)
- கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல்.
- கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சாதகமான சூழல் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 2,3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இன்று கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story
×
X