என் மலர்
தமிழ்நாடு

18 பேர் பலி: ரெயில்வே அமைச்சர் பதவி விலக செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

- கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
- மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
டெல்லி ரெயில் நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்ல முற்பட்ட பயணிகளிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது.
ஏற்கனவே கும்பமேளாவில் குளிக்க செல்ல முயன்றபோது 39 பக்தர்கள் பலியான கோர சம்பவம் நடந்துள்ளது.
கும்பமேளாவில் 30, 40 கோடி பேர் குளித்தார்கள் என்று சாதனையாக கூறுகிற பா.ஜ.க. அரசு எத்தனை பேர் கும்பமேளாவில் இறந்தார்கள் என்ற முழு விவரத்தை இன்று வரை வெளியிடத் தயாராக இல்லை.
இன்னும் பலர் காணாமல் போன விவரமும் தெரியாத நிலை உள்ளது. இதற்கெல்லாம் உத்தரபிரதேச பா.ஜ.க. அரசு பொறுப்பேற்க வேண்டும்.
குறிப்பாக கும்பமேளாவில் நீராட சென்றவர்கள் பலியானதற்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், தலைநகர் டெல்லியில் ரெயில் நிலையத்தில் மக்கள் பலியானதற்கு ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு காரணமான இவர்கள் பொறுப்பை ஏற்று பதவி விலகுவார்களா?
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் அநாகரீகமான முறையில் அழைத்து வரப்பட்டதை தடுக்கத் தவறிய பிரதமர் நரேந்திர மோடியை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும், பல இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற செய்தி அனை வரையும் மன வேதனையில் ஆழ்த்தி வருகிறது. இத்தகைய அவலநிலைக்கு நரேந்திர மோடி என்ன தீர்வு காணப் போகிறார் என்பதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.