என் மலர்
தமிழ்நாடு
தமிழகத்தில் 2 பேருக்கு எச்எம்பிவி தொற்று உறுதி- சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவல்
- எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- எச்எம்பிவி உருமாறப்பட்ட தொற்று ஏதும் இங்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, சென்னையிலும் 2 குழந்தைகளுக்கு மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், தமிழகத்தில் எம்எம்பிவி வைரஸ் பரவலுக்கு மாநில சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்தது. மேலும், எச்எம்பிவி உருமாறப்பட்ட தொற்று ஏதும் இங்கு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் எச்எம்பிவி பாதிப்பு சென்னையில் ஒன்று, சேலத்தில் ஒன் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பொதுவான சுவாச வைரஸ் நோய்க் கிருமிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சி எதுவும் இல்லை.
தும்மல், இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்கை மூடுதல், கைகளை கழுவினால் போதுமானது.
நெரிசலான இடங்களில் முகமூடி அணிதல், தேவை ஏற்பட்டால் சுகாதார நிலையத்தை நாடலாம்.
எச்எம்பிவி வைரஸ் காய்ச்சல் நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் தான். அதனால், யாரும் அச்சப்பட தேவையில்லை" என கூறியுள்ளது.