என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
2026 சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. தலைவர் விஜய் தர்மபுரியில் போட்டி?
- முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார்.
- த.வெ.க. தலைவர் விஜய் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அக்கட்சி கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. த.வெ.க. கொள்கைகள் மற்றும் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய உரை குறித்து அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு மற்றும் ஆதரவுக்குரல் எழுப்பினர்.
கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே, த.வெ.க. கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதே தகவலை தர்மபுரி மாவட்ட த.வெ.க. தலைவர் சிவா உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தர்மபுரியில் நடைபெற்ற த.வெ.க. வழக்கறிஞர் பிரிவு ஆலோசனை கூட்டத்தில் பேசும் போது த.வெ.க. தர்மரபுரி மாவட்ட தலைவர் சிவா, "தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் விஜய் போட்டியிடுவார்" என்று கூறியதாக தகவல்.