என் மலர்
தமிழ்நாடு
X
தமிழக மீனவர்கள் 34 பேர் இலங்கை கடற்படையால் கைது- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Byமாலை மலர்26 Jan 2025 9:50 PM IST
- மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்.
- மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 படகுகளில் சென்ற 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க உறுதியான தூதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
X