search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மானாமதுரை அருகே 8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு- 7 பேர் போக்சோவில் கைது
    X

    மானாமதுரை அருகே 8 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு- 7 பேர் போக்சோவில் கைது

    • அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.
    • கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இந்திரா நகர் கிராம நடுநிலைப்பள்ளியில், 8 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக 7 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மானாமதுரை அருகே அரசுப் பள்ளியில் குழந்தைகள் நல குழுமத்தினர் இலவச சேவை மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்ததினர்.

    அப்போது நடந்த கலந்துரையாடலில் சிறுமிகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்தனர்.

    யாரேனும் தவறாக நடந்துள்ளார்களா? என்ற கேள்விக்கு கிடைத்த பதிலால் அதிர்சியடைந்த பெண் அதிகாரிகள், தனித்தனியாக விசாரித்துள்ளனர்.

    சிறுமிகள் தெரிவித்த பகீர் பாலியல் தொல்லை புகார்கள் மீது தீவிரமாக விசாரணை நடத்தியதில், பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் பாலியல் தொல்லை அளித்த அதே ஊரைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அதன்படி, பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொல்லை அளித்ததாக கூற, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு முனியன் (66), மூக்கன் (72), மு (46), பழனி (46), மணி (50), சசி வர்ணம் (38) லட்சுமணன் (46) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×