என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க. யாருடன் கூட்டணி?... இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித்ஷா
    X

    பா.ஜ.க. யாருடன் கூட்டணி?... இன்று நண்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித்ஷா

    • அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.
    • அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார்.

    சென்னை:

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று இரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில்அமித்ஷா தங்கியுள்ளார்.

    இதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணி முதல் அமித்ஷா பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளார். குறிப்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.

    அதனை தொடர்ந்து, இன்று நண்பகல் 12 மணிக்கு அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. உடனான கூட்டணி குறித்து முக்கிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×