என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம்! - அன்புமணி
- சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டி மாமன்னன் ராஜராஜ சோழன் உலகிற்கே பெருமை சேர்த்தார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது.
மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா 2 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 1039-வது சதயவிழா அரசு விழாவாக இன்று காலை தொடங்கியது.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பெரிய கோவில் முன்பும் அலங்கார தோரண வாயில்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெரியகோவில் அருகே உள்ள பாலம், சோழன்சிலை பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம்!
தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது.
கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவன். நாமும் கடுமையாக உழைப்போம்... நமது ஆட்சியை நிறுவுவோம். மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம்! என்று தெரிவித்துள்ளார்.
இராஜராஜ சோழனின் பிறந்தநாளில் ஆட்சியை நிறுவ உறுதியேற்போம்!தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்திய பெரும்பள்ளி இராஜராஜ சோழனின் 1039-ஆம் #சதயவிழா இன்று கொண்டாடப்படுகிறது. கடல் கடந்து வெற்றிகளை குவித்ததன் மூலம் நம் குலப்பெருமையை உலகுக்கு உணர்த்தியவன் அவன். பாசனத் திட்டங்களுக்கு…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) November 9, 2024