என் மலர்
தமிழ்நாடு
X
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட அசாம் சிறுவன்- ஆந்திராவில் மீட்பு
Byமாலை மலர்26 Jan 2025 9:24 PM IST
- சிறுவன் சகிப் உதீன் கடந்த 12ம் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டான்.
- சிறுவனை மீட்ட ரெயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்களையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் 14 நாட்கள் கழித்து ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டுள்ளான்.
அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் சகிப் உதீன் கடந்த 12ம் தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைத்து கடத்தப்பட்டான்.
சிசிடிவி காட்சிகள் மூலம் சகிப் உதீனை 5 பெண்கள் வடமாநிலம் செல்லும் ரெயில் மூலம் ஆந்திராவிற்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
சிறுவன் சகிப் உதீன் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரெயில் நிலையம் அருகே இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று மீட்டனர்.
மேலும், சிறுவனை மீட்ட ரெயில்வே போலீசார் கடத்தலில் ஈடுபட்ட பெண்களையும் சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
Next Story
×
X