என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதர்வா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதர்வா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/13/9277125-idhayam.webp)
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் அதர்வா நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
- காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, சிம்புவின் STR49 ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறது டான் பிக்சர்ஸ் நிறுவனம்.
இந்நிறுவனம் 4வது படமாக நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படத்தை இயக்குகிறது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குகிறார். இது இவரது முதல் படமாகும்.
இந்நிலையில், அதர்வா நடிக்கும் இந்த படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்த படத்திற்கு இதயம் முரளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டிலை அறிவிக்கும் வீடியோவும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ... ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல... நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக்ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Here's the title announcement video of #IdhayamMurali https://t.co/qzNnQ5vfHs@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @Kayadulohar @Dop_Sai @rakshanvj @JustNiharikaNm @Actor__SUDHAKAR @AngelinB3 @Dravid_Selvam @PragyaNagra @jonitamusic…
— DawnPictures (@DawnPicturesOff) February 13, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.