என் மலர்
தமிழ்நாடு
X
சென்னை புத்தக கண்காட்சியில் சிறைவாசிகளுக்காக புத்தகங்களை தானம் செய்த புஸ்ஸி ஆனந்த்
Byமாலை மலர்4 Jan 2025 9:16 PM IST
- புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி நடைபெற்று பெற்று வருகிறது.
புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்யும் அரங்கில் பல்வேறு புத்தகங்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தானம் செய்தார்.
Next Story
×
X