search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொங்கல் தினத்தன்று சி.ஏ.தேர்வு- கனிமொழி எம்.பி. கண்டனம்
    X

    பொங்கல் தினத்தன்று சி.ஏ.தேர்வு- கனிமொழி எம்.பி. கண்டனம்

    • பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம்.

    ஜனவரி 14-ல் Business laws மற்றும் ஜனவரி 16-ல் Quantitative Apitude தேர்வு நடைபெறுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    பொங்கல் மற்றும் உழவர் திருநாள் அன்று மத்திய அரசின் சிஏ பவுண்டேசன் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, கனிமொழி 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

    தமிழ்நாட்டின் கலாசார திருவிழாவான பொங்கல் அன்று சி.ஏ. முதல்நிலை தேர்வுகளை நடத்தும் ஐ.சி.ஏ.ஐ.ன் (ICIA) முடிவு, நமது அடையாளம் மற்றும் பாரம்பரியத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும். தமிழ் மரபுகள் மற்றும் பிராந்திய சுயாட்சி மீதான அவர்களின் அலட்சியத்தை இந்த உணர்வில்லாத செயல் பிரதிபலிக்கிறது. தேர்வு தேதியை உடனடியாக ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    மத்திய அரசு தமிழர் உணர்வுகளை உண்மையாக மதிக்கும் பட்சத்தில், தேர்வு தேதியை மாற்றியமைக்க ஐ.சி.ஐ.ஏ.வை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும். நமது கலாசார பன்முகத்தன்மையை குலைக்கும் செயல்களை நிறுத்திவிட்டு, பெரும்பான்மையான தமிழர் உணர்வுகளை மத்திய அரசு மதிக்க வேண்டிய நேரம் இது.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×