என் மலர்
தமிழ்நாடு
தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
- சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
- கச்சக்குடா விரைவு ரெயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நெல்லை:
தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திண்டுக்கல்-திருச்சி ரெயில் பாதை பிரிவில் ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுரை கோட்டம் சார்பில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி செங்கோட்டையில் இருந்து நாளை (வியாழக்கிழமை) மற்றும் வருகிற 14, 17, 28, 31 ஆகிய தேதிகளில் காலை 7.05 மணிக்கு புறப்பட வேண்டிய மயிலாடுதுறை விரைவு ரெயில் (16848), நாகர்கோவிலில் இருந்து நாளை புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16352), குருவாயூரில் இருந்து இன்று மற்றும் 13, 16, 27, 30 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (16128), கன்னியாகுமரியில் இருந்து வருகிற 14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கொல்கத்தா ஹவுரா விரைவு ரெயில் (12666), நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி புறப்பட வேண்டிய சி.எஸ்.டி மும்பை விரைவு ரெயில் (16340) ஆகியவை விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்று பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து வருகிற14, 28 ஆகிய தேதிகளில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரெயில் (16354) திருச்சி வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக திண்டுக்கல், கரூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
மயிலாடுதுறையில் இருந்து வருகிற 14-ந்தேதி புறப்பட வேண்டிய செங்கோட்டை விரைவு ரெயில் (16847), கச்சக்குடாவில் இருந்து நாளை மறுநாள் புறப்பட வேண்டிய நாகர்கோவில் சிறப்பு ரெயில் (07435), சென்னை எழும்பூரில் இருந்து 14-ந்தேதி புறப்பட வேண்டிய குருவாயூர் விரைவு ரெயில் (16127) ஆகியவை திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து வருகிற 28, 31-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரெயில்கள் (16321-16322) கரூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.