search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
    X

    அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    • ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக புகார்.
    • விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் நீதிமன்றம் உத்தரவு.

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்தாததால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதற்கு தமிழக போலீசாருக்கு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த நேரமில்லை என அதிப்தி தெரிவித்தது.

    முன்னதாக,

    முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி 33 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி நல்லதம்பி எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    Next Story
    ×