என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
தமிழ்நாடு
![சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2024/10/24/5603702-firecrackers.webp)
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.
- நாளை முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னை:
தீபாவளி பண்டிகை வரும் 31-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது.
சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், 1 முதல் 8 வரை உள்ள கடைகளுக்கு ரூ.2.25 லட்சம், 9 முதல் 24 வரை உள்ள கடைகளுக்கு ரூ.4 லட்சம், 26 முதல் 38 வரை உள்ள கடைகளுக்கு ரூ.5.60 லட்சம், 42 முதல் 50 வரை உள்ள கடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகைக்கு பட்டாசு கடைகள் ஒதுக்கப்பட்டு, நாளை முதல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய கடைகள் அமைப்பதற்கான ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஏலத்தில் பங்கேற்க 2 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அருகே காமதேனு கூட்டுறவு வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.