search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குகேஷை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    X

    குகேஷை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
    • குகேஷ், சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இந்நிலையில், இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷூக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    18 வயதில் இளைய உலக செஸ் சாம்பியன் ஆனதற்கு டி.குகேஷுக்கு வாழ்த்துகள்!

    உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, உலகத்தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கியதன் மூலம் சென்னை உலக செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

    உன்னை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×