என் மலர்
தமிழ்நாடு
டங்ஸ்டன் விவகாரத்தில் முதலமைச்சரின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது- கனிமொழி எம்.பி
- டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.
தமிழக சட்டசபையில் மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது, சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டால் நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன் என்றார்.
இந்நிலையில், டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என முதல்வரின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த விவகாரத்தில் தற்போது மக்களோடு நிற்பது போல் நாடகமாடும் அதிமுக, நாடாளுமன்றத்தில் "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா 2023" -க்கு ஆதரவளித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் அதிமுக - வின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.