search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை குடிக்க கொடுக்கலாம்- சீமான் கிண்டல்
    X

    மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை குடிக்க கொடுக்கலாம்- சீமான் கிண்டல்

    • கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசினார்.
    • ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.

    மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

    அதிலும் குறிப்பாக, "ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது" என்று மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் கோமியம் சர்ச்சை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "மருத்துவமனைகளில் மாட்டு மூத்திரத்தை லிட்டர் லிட்டராக கொடுத்து குடிக்க சொல்ல வேண்டும். இந்த பைத்தியங்கள் கிட்ட நாடும் நாட்டு மக்களும் சிக்கி கொண்டுள்ளோம். மாட்டு பால் குடிக்கிறவன் இடைச்சாதி, மாட்டுக்கறி சாப்பிடுகிறவன் கீழ்சாதி, மாட்டு மூத்திரம் குடிக்கிறவன் உயர்ந்த சாதி. இது தான் இந்த நாட்டின் கட்டமைப்பு. உலகத்திலேயே இந்தியாவில் தான் நெய் எரிக்கப்படுகிறது, பால் கொட்டப்படுகிறது, மூத்திரம் குடிக்கபடுகிறது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×