என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டெல்லி கணேஷின் மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது- ஆளுநர் ஆர்.என்.ரவி
- நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
- டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றிரவு உயிரிழந்தார்.
டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கணேஷின் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
டெல்லி கணேஷ் அவர்கள், தனது ஒப்பற்ற பன்முகத் திறமையால், எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து, எல்லைகளைக் கடந்து சினிமா மற்றும் நாடக உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். நிரப்ப முடியாத அளவுக்கு அவரது மறைவு மிகவும் கடினமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று குறிப்பிட்டுள்ளார்.






