என் மலர்
தமிழ்நாடு

X
சென்னையில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது
By
மாலை மலர்25 Feb 2025 6:08 PM IST

- டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
- சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் பெண் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் சதீஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு டெலிவரி செய்வதற்காக சதீஷ் குமார் வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் உள்ள பெண் குளிப்பதை அவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதை பார்த்ததும் அப்பெண் கூச்சலிட, சதீஸ்குமார் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் பெண் புகாரளித்ததை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், சதீஸ் குமாரிடம் இருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X