search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து
    X

    துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. தலைவர் விஜய்க்கு வாழ்த்து

    • தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வி.சாலையில் நடைபெறுகிறது.
    • நடிகர் விஜய்-க்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியை அடுத்த வி சாலையில் நடைபெறுகிறது. த.வ.க. கட்சியின் முதல் மாநில மாட்டிற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "விஜய் எனது நீண்ட கால நண்பர், சிறு வயது முதலே விஜயை நன்கு தெரியும். மக்கள் பணி தான் முக்கியம், மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். விஜயின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்." என்று தெரிவித்தார்.

    Next Story
    ×