search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்ன கொடுமை சார் இது.. ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர் அமீர்
    X

    என்ன கொடுமை சார் இது.. ஆதவ் அர்ஜுனாவை மறைமுகமாக விமர்சித்த இயக்குநர் அமீர்

    • ஆதவ் அர்ஜுனாவின் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம் திமுகவுக்கு தேர்தல் வேலை பார்த்துள்ளது.
    • திமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்றிய புகைப்படங்கள் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ளார்.

    'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். இதற்கு கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா 6 மாதத்திற்கு இடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இன்று 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்! என்று ஆதவ் அர்ஜூனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் ஆதவ் அர்ஜுனாவின் ஒன் மைண்ட் இந்தியா நிறுவனமே திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்ததாக வீடியோவில் தகவல் 4 நிமிடம் 38 நொடிகள் கொண்ட காணொளியை ஆதவ் அர்ஜுனா பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், திமுகவுடனான உறவை வெளிப்படுத்தியுள்ள ஆதவ் அர்ஜுனா திமுகவுடன் இணைந்து தேர்தல் பணியாற்றிய புகைப்படங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது தொடர்பான புகைப்படங்களை ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பதிவை கிண்டலடிக்கும் விதமாக இயக்குநர் அமீர் தனது வாட்சப்பில் ஸ்டேடஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில், "மக்களுக்குத் தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன், மக்களிடம் பிரச்சாரம் செய்யப் போவதாக வீடியோ வெளியிடுகிறார். என்ன கொடுமை சார் இது" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×