search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? - சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி
    X

    ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா? - சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி

    • பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்தது.
    • 15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது என்று சீமான் பதில்

    விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பது போன்ற புகைப்படத்தை எடிட் செய்ததே நான் தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து பேசிய சீமான், "பெரியாரைப் பற்றி நான் தொடர்ந்து பேசி வருவதால் எங்கள் தலைவர் பிரபாகரனோடு நான் எடுத்த படம் எடிட் செய்யப்பட்டது என்கிற அவதூறை பரப்பி வருகிறார்கள்.

    15 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரனோடு நான் எடுத்த படம் வெளியாகிவிட்டது. இப்போது எடிட் செய்து கொடுத்ததாக சொல்லும் நபர் இவ்வளவு நாட்களும் என்ன செய்து கொண்டு இருந்தார்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து ஆதாரத்துக்கு ஒரு ஆதாரம் தேவையா என சீமானுக்கு இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கேள்வி எழுப்பி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "அந்த போட்டோ எடிட் செய்யப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று காட்ட சொல்லுங்கள். 15 வருடங்களாக அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று சீமான் கேட்டுள்ளார். அதுவே ஒரு ஆதாரம் என்று தான் எடுத்து காட்டுகிறோம் அதற்கு ஒரு ஆதாரத்தை எங்கிருந்து காட்ட முடியும்.

    அந்த புகைப்படத்தை எப்படி எடிட் செய்யப்பட்டது என்று டெமோ காட்ட சொல்கிறார். இணையத்தில் ஒரு படம் இப்படி தான் எடிட் செய்யப்படுகிறது என்று டெமோ காட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு தனியாக நான் ஒரு டெமோ காட்டவேண்டுமா?

    பிரபாகரனை பொய் என்று நான் சொல்லிவிட்டதாக சீமான் சொல்கிறார். பிரபாகரன் தான் உண்மையான தலைவர் என்பது தான் எங்களின் நிலைப்பாடு.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செங்கோட்டையன் அவர்கள் வந்து நான் சொன்னது உண்மையா பொய்யா என்று சொல்லியிருந்தால் இந்த பிரச்சனையே முடிந்திருக்கும். அவரை ஏன் பேசவிடாமல் தடுக்கிறீர்கள்" என்று பேசியுள்ளார்.

    Next Story
    ×