search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    VIDEO: சென்னை வந்த மத்திய கல்வி இணை அமைச்சருக்கு எதிர்ப்பு- திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
    X

    VIDEO: சென்னை வந்த மத்திய கல்வி இணை அமைச்சருக்கு எதிர்ப்பு- திமுக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்
    • மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

    புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது. அதனால் தமிழ்நாட்டுக்கு நிதி தர முடியாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற தவறான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதாகவும், இது முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது எனவும் விமர்சித்து இருந்தார். இதனால் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் கல்வித்துறைக்கு நிதி வழங்காதது, மும்மொழிக் கொள்கை விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டது.

    இன்று இன்வென்டிவ் (Inventive) 2025 என்ற தலைப்பில் சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு பதிலாக மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.

    இந்நிலையில், சென்னை ஐஐடிக்கு வருகை தந்த ஒன்றிய இணை அமைச்சர் மஜூம்தாருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    Next Story
    ×