என் மலர்
தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது திமுக- ஓ.பி.எஸ் மகன் ஜெயபிரதீப்

- எடப்பாடி பழனிசாமி நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள்.
- பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார்.
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
அதிமுக கட்சியை ஒரு நல்ல நோக்கத்தோடு கொண்டுப் போக வேண்டும் என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமிக்கு மேல் செல்வாக்கு உள்ள அனைவருமே கட்சியில் இருக்கக்கூடாது என்று ஒரு குறுகிய நோக்கத்தோடு செயல்பட்டார்.
அதேபோல், கட்சியில் யார் சுயமாக சிந்தித்து செயல்படுகிறார்களோ, யார் சரி, தவறு என்பவதில் சரி என்கிறார்களோ அவர்களையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதேபோன்ற செயல்பாட்டினால் நல்லவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்கள். ஒரு சிலர் மாற்று கட்சிக்கு மாரிவிட்டனர். ஒரு சிலர் மாற்றுக் கட்சிக்கு செல்ல விருப்பமில்லாமல் கட்சியில் ஒதுங்கி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கின்றனர்.
எடப்பாடியின் இதுபோன்ற செயல்களால் அதிமுக பின்னோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் 1998-களில் அம்மாவின் நம்பிக்கைக்கூறிய நாயகனாக செயல்பட்டு, தொடர்ந்து 18 ஆண்டுகளுக்கு மேல் அம்மா அவர்கள் ஒரு கடுஞ்சொல் கூட அப்பாவை பேசினது கிடையாது.
எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அப்பாவிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவுகளை எடுப்பார்கள். அவ்வாறு நம்பிக்கைக்குறியவர் அப்பா.
ஆனால், பொய்யான தகவல்களை தொண்டர்கள் மத்தியில் விஷமாக பரப்பிக் கொண்டிருக்கிறார். நிர்வாகிகளிடம் தவறான கருத்துகளை புகுத்திக் கொண்டிருக்கிறார். முழுநேரமும் சொந்த கட்சிக்காரர்களையும், கட்சி தலைவர்களையும் எப்படி காலி செய்ய வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் மட்டுமே எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
இதனால், திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 10 ஆண்டுகள் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே முதன்மையான கட்சியாக உருவாகிக் கொண்டிருக்கிறது.
நம் சகோதரர்களுக்குள் பிரிவினைவாதத்தை கொண்டு வந்து தற்போது வரை அவர்கள் எந்த மாற்றமும் இன்றி செயல்புரியாத காரணத்தினால், அதிமுக மிகப்பெரிய பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.