search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு: எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம்
    X

    தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு: எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம்

    • திருமண மண்டபங்களில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    • பதவிக்கு ஏற்ப பொங்கல் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் நிலையில், தி.மு.க.வினர் மிக எழுச்சியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இதையொட்டி கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடைகள், கரும்புகள், பொங்கல் பொருட்கள், பாத்திரங்கள், ரொக்கப்பணம் ஆகியவையும் வழங்கப்பட்டு வருகிறது.

    கழக செயலாளர்கள், மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறார்கள். ஆங்காங்கே உள்ள திருமண மண்டபங்களில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    இதுதவிர கட்சித் தலைமையில் இருந்தும் நிர்வாகிகளுக்கு பெரிய அளவில் பணம் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், பகுதி கழக வட்டக் கழக ஒன்றிய கழக நிர்வாகிகள் பேரூர் செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிள், தலைமை செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள், பி.எல்.ஏ.-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பதவிக்கு ஏற்ப பொங்கல் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம் கிடைத்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், கட்சி தலைமையில் இருந்து தீபாவளிக்கு பணம் தந்தது போல் இப்போது பொங்கலுக்கும் தந்துள்ளனர்.

    மாவட்ட செயலாளர் களுக்கு ரூ.10 லட்சம், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.5 லட்சம், மாநகர செயலாளர்களுக்கு ரூ.3 லட்சம், பகுதி செயலாளர்களுக்கு ரூ.1½ லட்சம், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம், கவுன்சிலர்கள், வட்டச் செயலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம், வட்ட பொறுப்பில் உள்ளவர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பதவிக்கேற்ப பொங்கல் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதனால் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×