search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு கலாச்சார போர்வையில் எதிரிகள் வருவார்கள்.. பா.ஜ.க.வை தாக்கினாரா விஜய்?
    X

    பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு கலாச்சார போர்வையில் எதிரிகள் வருவார்கள்.. பா.ஜ.க.வை தாக்கினாரா விஜய்?

    • நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.
    • ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள்

    விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர். தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கட்சி கொள்கை பாடலுடன் மாநாடு தற்போது தொடங்கி நடந்துவருகிறது. மேடையில் முதலில் கட்சிப் பிரமுகர்கள் கொள்கைகளை விளக்கியதைத் தொடர்ந்து விஜய் உரையாற்றிவருகிறார்.

    நான் மற்றும் நன்றாக இருப்பது சுயநலம். அதனால்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். நமக்காக இருக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமென எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

    கேள்விகளின் விளைவாக எழுந்ததே எனது அரசியல் முடிவு. அரசியலில் நமது நிலைப்பாடு என்ன என்பது உறுதியானால் எதிரிகள் தெரிவார்கள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற போதே எதிரிகள் உறுதியாகிவிட்டனர். பிளவுவாத சித்தாந்தம் மட்டுமல்ல ஊழல் அரசியலும் நமது எதிரிதான்.

    பிளவுவாத எதிரிகள் நமது கண்ணுக்குத் தெரிவார்கள். அவர்களை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்குத் தெரியாமல் வருவார்கள். எதிரிகளைத் தீர்மானித்து விட்டால் மட்டும் போதாது.

    மகத்தான அரசியல் என்றால் மக்களுக்கான அரசியல் தான். திட்டங்கள் அறிவித்து செயல்படுத்துவது என்பதை தேர்தல் முடிவுகள் போல் செயல்படுத்த வேண்டும்.

    இது பணத்திற்காகக் கூடிய கூட்டமல்ல. ஏ டீம், பீ டீம் என்று கூறுவதைக் கண்டு பயப்பட போவதில்லை. எங்களுக்கு யாரும் எந்த சாயமும் பூச முடியாது. நல்லது நடக்காதா என்று மக்கள் காத்திருக்கின்றனர் 2026 இல் போரை அறிவித்ததும் தவெக சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள். 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு மக்கள் வாக்களிக்பார்கள் என்று பேசியிருக்கிறார்.

    கலாச்சாரம் ஆகியவற்றை அரசியலில் பாஜக முன்னிறுத்தி செயல்பட்டு வரும் நிலையில் விஜய் பேச்சு பாஜகவை மறைமுகமாக விமர்சித்ததாக பார்ப்படுகிறது. மேலும் பெரியாரை நமது கொள்கைத் தலைவராக முன்னிருத்தும்போது பெயிண்ட் டப்பாவை தூக்கிக்கொண்டு சிலர் வருவார்கள் என்று தனது பேச்சின் தொடக்கத்தில் விஜய் குறிப்பிட்டார்

    சமீப காலமாக திருவள்ளுவர் ஆகிய தமிழர் அடையாளங்களின் மீது காவி சாயம் பூசப்படுவதை விஜய் மறைமுகமாக விமர்சித்ததாகவும் இதை பார்க்க வேண்டி உள்ளது. ஆளுநர் பதவியை அகற்ற வேண்டும் என்பது தவெக அரசியல் கொள்கைகளில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×