search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
    X

    இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    • வி.நாராயணன் வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
    • தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வி.நாராயணன்.

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது.

    இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வி.நாராயணன் வரும் 14-ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது வி.நாராயணன் உள்ளார். இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (#ISRO) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. V நாராயணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. நாராயணன் அவர்கள், விண்வெளி அறிவியல் துறையின் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பது நம் மாநிலத்திற்கு பெருமை.

    தங்கள் தலைமையில், இந்திய நாடு விண்வெளி ஆராய்ச்சியில் இன்னும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×