search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
    X

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

    • தி.மு.க.வினர் விர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தேர்தல் களம் களைகட்டி, திருவிழா போல் காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு இறுதி வேட்பாளர்கள் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படுகிறது.

    ஏற்கனவே தி.மு.க.வினர் பிரசாரத்தை தொடங்கி தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி வரியாக பிரித்து வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தி.மு.க அரசின் சாதனை திட்ட ங்களை எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களுடன் உள்ளூர் தி.மு.க பிரமுகர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டிடும் சீதாலட்சுமி இன்னமும் சின்னம் ஒதுக்கப்படாத நிலையில் கடந்த 2 நாட்க ளாக தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆனாலும் அனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக அவர் மீது ஈரோடு டவுன் போலீ சார் மற்றும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருந்தாலும் சீதாலட்சுமி தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த முறை முக்கிய எதிர்க்கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் எந்த ஒரு பரபரப்புமின்றி, ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக உள்ளது.

    கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இது மட்டுமின்றி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமட்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.

    இதேபோல் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் பரபரப்பாக காணப்பட்டது. தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். இதனால் தேர்தல் களம் களைகட்டி, திருவிழா போல் காணப்பட்டது. வாக்காளர்களும் பணம், பரிசு மலையில் நனைந்தனர்.

    இந்த முறை தேர்தல் களம் மாறி உள்ளது. தி.மு.க.வினர் மற்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியாகிறது.

    இதைத்தொடர்ந்து நாளை முதல் தேர்தல் பிரசாரம் மேலும் தீவிர மடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொட ர்ந்து வரும் 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.

    Next Story
    ×