என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எப்படி ஜெயிக்க முடியும் என்று எல்லோரும் கேட்டார்கள்.. மாநாட்டில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி!
- ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
- தனியாக படையோடு பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் சென்றான்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் [தவெக] முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறுகிறது. பிரமாண்டமான முறையில் நடக்கும் இந்த மாநாட்டுக்குத் தமிழ்நாடு முழுவதும் இருந்து பலர் வருகை தந்தனர். மேடையில் தோன்றி விஜய் உரையாற்றினார்.
பேச்சுக்கிடையில் தனது ஸ்டைலில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் விஜய் கூறியுள்ளார். வழக்கமாக இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் கூறும் குட்டிக் கதை அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும். அந்த வகையில் தற்போதும் அந்த பார்முலாவை பயன்படுத்தியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு,
ஒரு நாட்டில் பெரிய போர் ஒன்று வந்தது. அப்போது நாட்டை வழிநடத்தும் சக்திவாய்ந்த தலைமை இல்லாததால் ஒரு சிறுவனின் கையில் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதனால் நாட்டில் இருந்த பெரிய ஆட்களெல்லாம் மிகவும் பயத்தில் இருந்தனர்.
ஆனால் அந்த சிறுவன் பயமில்லாமல் படையை நடத்தும் பொறுப்பை ஏற்று போர்க்களம் போகலாம் என்று சொன்னான். அப்போது அங்கு இருந்த பெரிய மனிதர்கள், நீ சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம், சக்திவாய்ந்த பெரிய எதிரிகள் இருப்பார்கள். அவர்களை களத்தில் எதிர்கொள்வது சாதரண விஷயம் இல்லை. இது விளையாட்டு விஷயம் இல்லை.
அவர்களை எதிர்த்து எப்படி தனியாக படை நடத்த முடியும், எப்படி ஜெயிக்க முடியும் என்று எல்லாரும் கேட்டார்கள். எந்த பதிலும் சொல்லாமல் தனியாக படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பையன் என்ன செய்தான் என்று சங்க இலக்கியத்தில் சொல்லியிருக்காங்க.. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க, இல்லன்னா.. படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்று விஜய் கதையை முடித்தார்.
சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி நெடுநல்வாடை, புறநானூறு ஆகியவற்றில் கூறப்பட்ட பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து நெடுஞ்செழியன் பற்றிய கதையையே விஜய் இங்கு குறிப்பிடுகிறார். நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னராவார்.
தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட நெடுஞ்செழியன் ஈடுபட்ட தலையாலங்கானத்துப் போரில் மூலம் அவரது வீரம் போற்றப்பட்டது. விஜய் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளதால் சிறுவன் பாண்டிய நெடுஞ்செழியன் சூழலில் தற்போது தான் இருப்பதாக விஜய் கூற வருகிறார் என்று தெரிகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்