என் மலர்
தமிழ்நாடு

X
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தடையில்லா சான்று கிடைத்தது
By
மாலை மலர்26 Feb 2025 7:58 PM IST

- ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.
- இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானம் போல் கோவையிலும் சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என்று 2024 திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளிச் சிறைச்சாலை இயங்கி வரும் இடத்தில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கோவை ஒண்டிப்புதூரில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
Next Story
×
X