என் மலர்
தமிழ்நாடு
X
ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த அரசு குழு அமைத்தது ஊழியர்களை ஏமாற்றும் செயல்- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
Byமாலை மலர்6 Feb 2025 2:41 PM IST
- தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியும் இதுதான்.
- குழு அமைப்பது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 309-ல் "ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு 'புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு திட்டம், மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவை குறித்து ஆராய குழு அமைப்பது என்பதே அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல்.
மேற்படி மூன்று திட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசு ஊழியர்களின் கோரிக்கை. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியும் இதுதான். இந்த நிலையில், குழு அமைப்பது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவது போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
X