search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்
    X

    புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த த.வெ.க. தலைவர் விஜய்

    • மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம்.
    • உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம்.

    நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைந்து 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.

    புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.

    இதையொட்டி த.வெ.க தலைவர் விஜய் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியதாவது:-

    மலரும் புத்தாண்டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை காப்போம். உழவர்கள், தொழிலாளர்களின் நலன் காப்போம். முதியோர்கள். மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாப்போம். உண்மையான சமூகநீதியுடன் சமத்துவத் தமிழகம் அமைக்க உறுதி ஏற்போம். அனைவரிடமும் அமைதி, ஒற்றுமை. சகோதரத்துவம், மனிதநேயம் செழித்து வளர இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    Next Story
    ×