search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    LIVE

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாகவே கரையை கடக்கும்- லைவ் அப்டேட்ஸ்

    • சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை மாமல்லபுரம்-காரைக்காலுக்கு இடையே புதுச்சேரிக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு கரையை கடக்கக்கூடும். இதனால் தமிழகத்துக்கு புயல் ஆபத்து நீங்கியது. இருப்பினும் சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 310 கி.மீ., புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 360 கி.மீ. தொலைவிலும் சென்னைக்கு 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. திரிகோணமலையின் கிழக்கு வடகிழக்கே 260 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

    மேலும், தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நேரத்தில் 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், இடையிலே 75 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Live Updates

    • 29 Nov 2024 1:45 PM IST

      தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

      செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் இன்று அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 29 Nov 2024 12:08 PM IST

      வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாண்டி மெரினாவிற்கு செல்லும் சாலையை காவல்துறையினர் மூடினர்.

      கடற்கரைக்கு வந்த மக்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

    • 29 Nov 2024 11:51 AM IST

      ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

    • 29 Nov 2024 11:34 AM IST

      இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும். புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்று வீசும்- பாலச்சந்திரன்

    • 29 Nov 2024 11:19 AM IST

      தென்கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகைக்கு 310 கிமீ தொலைவிலும், சென்னைக்கு 400 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. நாளை பிற்பகல் புதுச்சேரி, மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 90 கி.மீ வரை காற்று வீசக்கூடும் -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    • 29 Nov 2024 11:18 AM IST

      வங்கக்கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணிநேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    • 29 Nov 2024 10:46 AM IST

      சென்னையில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. பகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்கின்றனர்.

    • 29 Nov 2024 10:45 AM IST

      சென்னையில் அதிகாலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×