search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விருப்பமா? QR CODE அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்
    X

    அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விருப்பமா? QR CODE அறிமுகம் செய்த எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன்

    • அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
    • அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த நடவடிக்கை.

    திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடங்கி புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது வரையிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் மக்களுக்குக் கிடைக்கின்றன.

    இந்த திட்டங்கள் எல்லாமே எழும்பூர் தொகுதி மக்களிடம் முழுமையாக சென்றடைந்துவிட்டதா என்பதை அறியவும் மக்களின் குறைகளைக் கேட்டறியவும் வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கும் பணியில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் குழுவினர் களப்பணியில் இறங்கியிருக்கிறார்கள்.

    இந்த களப்பணி குழுவினர் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாடல் அரசு செயல்படுத்திவரும் நலத்திட்ட உதவிகள் அடங்கிய கையேடு வழங்குகிறார்கள்.

    அதோடு, திராவிட மாடல் அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை போன்ற உதவிகள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்கிறார்கள்.

    அதோடு, சுய உதவிக் குழுவில் சேர்ந்திருக்கிறார்களா அல்லது சேர விரும்புகிறார்களா? என்றும் மேலும் சிறு தொழில் தொடங்குவதற்கு விருப்பம் இருக்கிறதா என்பதையும் கேட்டு அறிகிறார்கள்.

    அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோருக்கான உதவிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கபடுகிறது.

    இந்த வகையில், திராவிட மாடல் அரசு வழங்கும் திட்டத்தில் இணைய விரும்பும் நபர்கள் எழும்பூர் எம்.எல்.ஏ.வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக க்யூ ஆர் கோடு உருவாக்கப்பட்டு, வீடு தோறும் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

    இதன் மூலம் அரசு உதவிகள் பெற விரும்பும் நபர்கள் நேரடியாக பரந்தாமன் எம்.எல்.ஏ. அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.

    அரசு நலத்திட்ட உதவிகள் பெற விருப்பம் தெரிவிக்கும் நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தேவையான உதவிகள் செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை திட்டம் போட்டு செயல்படுத்தி வருவதாக எம்எல்ஏ பரந்தாமன் தெரிவித்தார்.

    Next Story
    ×